Monday, 1 September 2014

அவரைப்பற்றி இவர் P.P.R எனப்படும் P.இராஜகோபால் பற்றி ஜவாஹர் பிரேமலதா

அவரைப்பற்றி                                                  

P.P.R  எனப்படும் P.இராஜகோபால்
      
இவர்  
இணைப்பேராசிரியர் ஜவாஹர் பிரேமலதா 
             
நம் முன்னோர்கள் பிற்காலச்  சந்ததியினருக்காக ஏராளமான அளவில் நீர் நிலைகளைப் பெருக்கி ஆறு களாகவும் ,ஏரிகளாகவும்,குளங்களாகவும் நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் இன்று அவற்றின் அருமை தெரியாமல் பிற்கால சந்ததியினரைப் பற்றி சிறிதும் நினையாமல் நாம் அவற்றை அழித்து வருகிறோம். இன்றைய நிலையில் பொரும்பாலான பேருந்து நிலையங்கள் ஏரிகளில்தான் அமைக்கப்பட்டு வருகிறது என்பது வேதனையிலும் வேதனை.இதையெல்லாம் மக்களுக்கு எடுத்துரைத்து.  ஏரிகளுக்கும் குளங்களுக்கும் நீர் வரும் இடங்களையெல்லாம் ஆக்ரமிப்பு செய்து இயற்கைக் காடுகளை அழித்து,காங்கிரீட் காடுகளை எழுப்பி நீர் ஆதாரங்களையெல்லாம் அழித்து வருகிற நிலைமையை மக்களுக்கு உணரும்படி எடுத்துரைத்தார்      P.P.R  எனப்படும் P.இராஜகோபால் 

. சேலத்தில் அம்மாப்பேட்டையில் அழைந்திருக்கும் குமரகிரி ஏரியைச் சீரமைக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்களிடம்தான் உள்ளது என எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.  தன் சக நண்பர்களிடமும் ஊர் பெரிய மக்களிடமு எடுத்துரைத்து ஒரு குழுவை உருவாக்கினார். இந்த ஏரியானது சுமார் 70 ஆணடுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகளாலும் துணிக் கழிவுகளாலும் நிரம்பி சென்னை கூவம் போல் மாறிக் கொண்டிருக்கிற நிலையையை உணர்த்தினார்.. இந்த ஏரியானது இருகூறுகளாக பிரிந்து நடுப்பகுதி உயர்ந்த கரடுகளால் அமைந்திருந்தது.  இக்குழு மக்கள் இந்த கரடைச் சமப்படுத்தி மக்கள் சிரமமின்றி செல்லும் பாதையாக்கினார்கள். 
                             


இந்த ஏரியைத் தாண்டிச் சென்றால் தான் முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள குமரகிரி மலையைத் தரிசிக்கலாம்.
                               ஐம்பூதங்களில் ஒன்றான நீரின் இன்றியமை யாமை உணர்ந்து நீரின்றியமையாது உலகு (குறள்.20)என நீர்வளத்தின் மேன்மையைக் குறள் கூறியுள்ளது. நிலம்என்பது உடம்பு.  நீர் என்பது உயிர். உடம்பால் அழியின் உயிரால் அழிவர் என்ற திருமூலரின் கருத்து ஈண்டு நினைத்துப் பார்க்கத்தக்கது. 

நிலம் எனப்படும் உடம்பு அழியாமல் காக்கப்பட வேண்டுமாயின்நீர்நிலைகளான உயிரைப்பேணவேண்டும். நீர் நிலைகளைப் பாதுகாப்பது உலகையே பாதுகாப்பது ஆகும். 

உலக நீர் ஆதாரத்தில் 97.5 சதவீதம் கடல்நீராகும் 2.5 சதவீதம் மட்டுமே நல்லநீர். பனிப்பிரதேசத்தில் உள்ள நீர் நமக்குப் பயன்படுவதில்லை.நல்ல நீர் குறைவாக இருப்பது ஒருபுறம் என்றால்நாட்டின் வறட்சி மற்றும் வெள்ளப் பெருக்கிற்காக இந்தியா போன்ற நாடுகள் மறுபுறம் பெருந்தொகையை ஒதுக்கவேண்டியுள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார பின்னடைவிற்கு இதுவும் ஒரு காரணமாகும்.இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் நீர்வளத்தையாவது பேணிப்பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே தான் வள்ளுவர்,அமிழ்தம் என்று மழைநீரைக் குறிப்பிடுகிறார்.இதை உணர்ந்தவர்கள் வெகுசிலரே. அவர்களில் ஒருவர் தான் பெ.இராஜகோபால்.

முருகப்பெருமானைத் தரிசிக்கும் பொருட்டே இந்த ஏரியின் மையக்கரட்டை சமப்படுத்தினார்கள். ஒருபுறத்திலுள்ள ஏரி நிரம்பி பாதையின் மேல் வழிந்து அடுத்த பகுதிக்குச் செல்லும் வகையில் இந்த ஏரி அமைந்திருக்கும் 
                               


ஆனால் தற்போது, ஒரு பக்கத்த்து ஏரி மட்டுமே உள்ளது. மற்றொரு பக்கம் முழுவதும் கட்டிடங்களால் நிரப்பப்பட்டுவிட்டது. மக்கள் தொகைப் பெருக்கம்,இந்தப் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் இரசாயன நீர் போன்றவற்றினாலும் பன்றி,நாய் உள்ளிட்ட விலங்குகளின் இருப்பிடமாக மாறிப் போனதாலும் குமரகிரி ஏரி அழியும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டதை மாற்ற குமரகிரி நீர்நிலை ஆதார பசுமை இயக்கக் குழு முனைந்த்து.பொதுமக்களிடம் 32 இலட்சம் நிதி வசூல் செய்து, மக்களையும் மாணவர்களையும் கொண்டு ஏரியைத் தூய்மை செய்தது. இன்று ஏரியானது தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு மரங்கள் நடப்பட்டு பசுமைப்  பூங்காவாகக் காட்சியளிக்கிறது. 
நீர்அறம் நன்று நிழல் நன்று‘(சிறுபஞசமூலம்.61)
      ‘குளம்தொட்டு காவு(சோலை) பதித்து‘(64) பாடல்வரிகள் குளம் அமைப்பதோடு சோலைகளை அமைப்பதும் அறச்செயல் என்கிறது. இப்பகுதி மக்கள் சுற்றப்புறத்தைப் பேணுவதும் அறமே என உணர்ந்து இதை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளனர். தற்போது பெய்து வரும் நிலையில் ஏரி நிரம்பி தூய்மையாக்க் காட்சியளிக்கிறது. இந்த தொண்டில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர் PPR  என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் பெ.இராஜகோபால் அவர்கள். 
                                    


பெருந்தொழிலதிபராக இருந்தும் மக்களோடு மக்களாக நின்று  அவர்களையெல்லாம் அதிகாலையில் ஒன்று திரட்டி தினந்தோறும் இரண்டு மணிநேரம் என சுமார் ஆறுமாத காலங்கள் தொய்வில்லாமல் இப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அத்தோடு மட்டுமில்லாமல் இக்குழுவின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டு இப்பகுதி மக்களிடமிருந்து பெரும் நிதியை இப்பணிக்காகப் பெற்று அனைவரும் மன நிறைவோடு பாராட்டக்கூடிய வகையில் இந்த அரும்பணியை திறம்பட செய்து முடித்துள்ளார். 

ஔவையின் 
நாடா கொன்றோ காடா கொன்றோ 
 ...... எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி வாழிய நிலனே

 என்ற இந்தப்பாடலுக்கு வாழும் எடுத்துக்காட்டாக விளங்கி முருகப்பெருமான் அருளுக்கும் மக்களின் பேரன்பிற்கும் பாத்திரமான பெ.இராஜகோபால்  இப்பகுதி மக்களின் நீர்நிலைகளைப் பேணிப்பாதுகாத்துச் சுற்றுச்சூழலுக்கும் உலகத்திற்கும் ஆற்றிய பெருந்தொண்டிற்கு சேலம் மக்கள் மட்டுமல்ல உலகமே நன்றி செலுத்தும் 
நீரைக்காத்து, நிலையத்தைக் காத்து, மக்களின் சுற்றுச்சூழல் வளத்தைக் காக்கும் ஒரு மனிதர் மாமனிதர் ஆகிறார்,..  

5 comments:

 1. இவரது தொண்டும் பணியும் மிகவும் பாராட்டத்தக்கது. இவரைப்போல் ஊருக்கு ஒரு மனிதர் இருந்தால் போதும்.நாடு வளம்பெறும். அம்மையார் அவர்கள் இவரைப் பற்றி எழுதி எங்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். இவரது கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.ஆழ்ந்த புலமை. சங்க இலக்கியத்தில் ஊசி,பருத்தி,கயிறு என இப்படிப்பட்ட அரிய செய்திகளைத் தொகுத்தளித்து தமிழரை தலைநிமரச் செய்துள்ள இவருக்கு தலை வணங்குகிறேன்.

  ReplyDelete
 2. great work.....wel done.....keep contributing to the community....

  ReplyDelete
 3. all the best.....keep up your work

  ReplyDelete
 4. பார்வையிட்டவர்களுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete