Sunday, 29 June 2014

நிலத்தடித்தொட்டி நீரால் விளையும் நன்மைகள்:


அயர்லாந்தில் ஒரு நிலத்தடி மழைநீர் சேமிக்கும் தொட்டி 

காளிமைந்தன் வீ.சே. கருப்பண்ணன் தொடர்கிறார்

     நிலத்தடித்தொட்டி நீரால் விளையும் நன்மைகள்: 
1. குடிக்க மிகச் சுவையான நீர்
 2.விறகோ  எரிவாயுவோ 40 சதம் குறைவு.
 3.சமைக்கும் நேரம் குறைவு. 
4. பெரிய வீடுகளின் கல்லூரிக் கட்டிடங்களின் கூரைகளில், ரயில்வே ஸ்டேஷன் பயணிகள் கூரைகளில் இருந்து சேமிக்கப்படும் மழைநீர் 

1.0 குடிப்பதற்கு 
2)சமைப்பதற்கு மட்டு மின்றி, அனைத்து ஹாஸ்டல் மாணவர்களுக்கும், பயணிகளுக்கும் 
(3)துணிதுவைக்க
(4)குளிக்க வேண்டிய நீர் கிடைக்கிறது.
(5)ரயில் பயணிகளுக்கு நல்ல குடிநீரும், கக்கூசுக்குக் கூட நல்ல நீர் கிடைக்கும் 
(6) யார் எங்கிருந்தாலும் உடல் சோப்பு 75 சதம் மிச்சமாகிறது.
(7) துணி சோப்பு குறைந்தது 60 சதம் குறைகிறது. 
(8) துணி பளிச்சென்று வெளுக்கிறது.
(9வீடுகளில் ஹாஸ்டல்களில் சேமித்த நீர் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு வரும். அண்டை யில் வாழும் எளியோருக்கும் கூட நீர் தொடர்ந்து சப்ளை செய்யலாம்!

சென்னை நடுநகரில் உள்ள லயோலா, திருச்சி புனித வளவனார் கல்லூரிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். நாமக்கல்லில், இதர மாவட்டங்களில் கல்வி வணிகர்களால் நடத்தப்படும் நூற்றுக்கணக்கான பொறியில் கல்லூரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான் பள்ளிகளைக் கணக்கில் கொள்ளுங்கள்! ஏராளமான நனமைகள் அற்ப செலவில் விளையும். அவர்கள் அளவற்ற பணத்தைஅள்ளிக் குவிக்கிறார்கள். அவர்களை அரசு தயவு தாட்சண்யமின்றி நிலத்தடி நீரைத்தொடாதே, மழைநீர் முழுதையும் நிலத்தடித் தொட்டிகளில் கட்டாயம் சேமி என்று உத்தர விடலாம். அரசுக்கு மின்னுற்பத்திச் செலவு குறையும். கல்லுரி பள்ளி வணிகருக்கும் அள வற்ற லாபம்! 
ஒரு மாடல்  நிலத்தடி நீர்த் தொட்டி 
ஆனால் ஒரு முறை மட்டும் முதலீடு தேவை! 
இந்தக்கோடீஸ்வரஸ்களுக்குக் கடன் தர வங்கிகள் காத்துக் கொண்டு வரிசையில் நிற்கின்றனவே!

இந்தனை கெடுதல்களை அகற்றி இத்தனை நன்மைகளை அடையக் கூடிய திட்டத்தை-மைய மாநில அரசுகள் தீர ஆலோசித்து நிறைவேற்ற வேண்டும். அதற்காக தன்னார்வ இயக்கங்கள் மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் அணுக வேண்டும்!

          இல்லாத நீரை எப்படி சப்ளை செய்வது?


ஆண்டு முழுதும் மழை பொய்த்துப் போன நேரத்தில் யார் அரசாண்டாலும் ,மந்திரத்தில் மாங்காய் காய்க்க வைக்க முடியாது; நீர் தரமுடியாது! அரசை நக்கல் செய்வது தர்மமல்ல.
இல்லாத நீரை எப்படி சப்ளை செய்யமுடியும்? அதி காரிகளும் ஊடகத்தினரும்,தனியார் ஆற்றோரம் ஆழ் துளைக் கிணறுகளில் (ஆணிணூஞுதீஞுடூடூண்) இருந்து தண்ணீரை உறிஞ்சி விடுகிறார்கள் என கூக்குரலிடுகின்றனர். அதே தனியாரிடம் இருந்து தங்கள் வீட்டுக்கு மட்டும் நீரை வாங்கிக் கொட்டிக் கொள்கின்றனர்.
தனியார் ஈடுபடும் எதிலும் பொருள் தட்டுப்பாடு ஏற்படுங் காலங்களில் கொள்ளை லாபம் அடிப்பது உலகறிந்த ரகசியம். தனியார் தொழிலை இந்த அரசியல் வணிகர்களால் தடை செய்ய முடியுமா?
எந்தப்பத்திரிகையானாலும்,இன்ன தனியார் இந்தத் தப்பைச் செய்கிறார் என்று ஏன் பெயர் குறிப்பிட்டு-எழுதுவதில்லை? 
பல தொழில்களையும் செய்யும் பல கட்சிப் பிரமுகர்கள்தான் இதைச் செய்கின்றனர் என்பது தெரியும். 
அவர்களைப் பெயர் குறிப்பிட்டு எழுதி விட்டால், அப்புறம் விளம்பரம் கிடைக்காது. 
சில பத்திரிகைகளுக்கு செய்திகளாக வணிக விளம்பரத்தைப் போடப் பணம் கிடைக்காது.
சுத்தமான குடிநீர்ப்பஞ்சத்தை நிரந்தர மாகப் போக்க ஒரே 
வழி-அனைத்து நகரங்கள் - கிராமங்களில், தோட்டங்களில் உள்ள வீடுகளின்,கட்டிடங்களின்-கூரைகளின்மேல் விழும் மழைநீரை நிலத்தடித் தொட்டிகளில் சேமிப்பதே! அத்தோடு சமையல் எரிவாயு பயன்பாடும் 20 சதமாவது குறைந்து போகும்! நீரைச் சுத்திகரிக்கும் மின்சாரம் மிஞ்சம்! பூச்சிக்கொல்லி மருந்து, ஃப்ளூரைட் உப்பு, அவற்றால் விளையும் நோய் கள் என்ற பேச்சுக்கும் இடமில்லை!

                        நானே செய்த பரிசோதனை!

 2001-இல் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மழை நீரை அறுவடை செய்யச் சொல்லி உத்தரவிட்ட போதே-நான் என் வீட்டில் யாரும் சொல்லித் தராமலே-வீட்டுக் கான்கிரீட் கூரை மேல் விழும் நீரை குழாய்களின் மூலம் கொண்டு வந்து-ஒரு நீர்கசியா நிலத்தடித் தொட்டியில் சேமித்தேன். 

அத்தொட்டி கட்டும் போது நீர் கசியாத ரசாயனப் பவுடர் கலந்து கட்டினேன். நீர் வெளியிலும் போக முடியாது. எத்தனை மழை கொட்டினாலும் வெளிநீரும் ஒரு சொட்டுக் கூட உள்ளே கசிந்து வர முடியாது. 

தொட்டியின் மேல் காங்கீரிட் தளத்தால் மூடி விட்டேன். ஒரு ஆளிறங்கு மூடியும் வைத்தேன். நீர் தொட்டிக்குள் செல்லும்முன்–மணல் சிறு ஜல்லிகள் அடுப்புக்கரி இவை நிரப்பிய இரு சிறு தொட்டி களின் மூலம் செலுத்தி வடிகட்டிச் சுத்தம் செய்து–நிலத்தடித் தொட்டியில் சேமித்தேன்.

மேலே சொல்லியபடி,அந்தத் தொட்டியில் மழை நீரை கடந்த 2001-இல் முதன் முதல் சேமித்தேன். முதலில் 10 மாதம் கழித்து ரத்தப் பரிசோதனை நிலையத்தில் என் தொட்டி நீரைக் கொடுத்து–ரத்தத்தில் கிருமிகள் உள்ளனவா என்று சோதிப்பது போல,கல்ச்சர் டெஸ்ட் செய்து பார்த்தேன். 

எந்தக் கிருமியும் வளரவில்லை. ஏனெனில் அந்த நீரில் வெளிக்காற்றோ, ஒளியோ படாமல் மூடப் பட்டு உள்ளது. சூரிய ஒளி இல்லாமல் உலகில் எந்த உயிரும் வாழமுடியாது. 

இது உயிரியல் விஞ்ஞானம் படித்த அனைவருக்கும் தெரியும். நான் தாவரவியல் படித்தவன் என்பதால் இது எனக்கு-பால பாடம் போல் தெளிவாகத் தெரியும். இம்மாதிரி காற்றும் ஒளியும் படாத தொட்டியில் இருக்கும் நீர் பூமியடியில் இருந்து போர் மூலம் எடுக்கப்படும் நீருக்குச் சமமே; என்றுமே கெடாது,என்பதறிக.

              இங்கிலாந்தில் கூரை நீர்,வீடு தவறாது சேமிப்பு 

. ஆண்டு முழுதும் மழை பெய்யும் இங்கிலாந்தில் ஒரு வீடு தவறாது கூரைகளில் மழை நீரைத் தொட்டிகளில் சேமிக்கிறார்கள் என்று-கோவையில் அவிநாசி சாலையில் குடியிருக்கும் என் நண்பர்-ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் . மு.சுப்பண்ணன் எனக்குச் சொல்கிறார். 
                                                               

இவரது மகன் ஒரு மருத்துவர். அவர் லண்டனில் மருத்துவத் தொழில் புரிகிறார். பிரிட்ஷ் குடிமகனாக மாறி உள்ளார். அடிக்கடி மகனையும் மருமகளையும் பேரக் குழந்தைகளையும் பார்க்க லண்டன் செல்லும் நண்பர்-நேரடியாகக் கண்டுவிட்டு இதைச் சொல்கிறார். இத்தனைக்கு ஆண்டு முழுதும் மழை பெய்யும் நாடு இங்கிலாந்து!

 2001-இல் இருந்து இன்றுவரை எனக்குக் குடிநீர்த் தட்டுப்பாடு என்பது கிடையாது. காவிரி ஆறு–சாக்கடைத் தண்ணீர் போல் ஓடுவதால்-நகராட்சி வழங்கும் காவிரி நீரைக் குடிப்பதில்லை. துணிதுவைக்க குளிக்க பாத்திரங்கள் சுத் தம் செய்யப் பயன்படுத்துகிறோம்.

என் வீட்டின் கூரைப் பரப்பு 2500 சதுர அடி கொண்டது என்றாலும்-நன்றாக வடகிழக்கு மழை பெய்யும் போது இரண்டு அல்லது மூன்றுநாளில் சுமார் 30,000லிட்டர் கொள்ளளவுள்ள தொட்டி நிறைந்து விடுகிறது. மழைக்காலம் முடியுமுன்பு–செலவாகும் நீரைச் சரிசெய்து தொட்டியில் குறைந்து போகும் நீரையும் நிரப்பி விடுகிறேன். சென்ற ஆண்டுக்கு முன் சேமித்த நீர் இன்றும் பயன்படுகிறது. தினம் சமையலுக்கும் குடிக்கவும் 40 லிட்டர் எடுத்தாலும் கூட, 30000 லிட்டர் நீர் 750 நாட்களுக்கு வரும் நாமக்கல்லில்  வீட்டின் மேல் கொட்டிய “சிறுவாணி” நீர்!

 ஒருமுறை இந்த நீரை பாட்டிலில் கிருஷ்ணகிரிக்கு எடுத்துச் சென்றேன். அங்கே ஒரு பொறியாளர் அந்த நீரைக் குடித்துவிட்டு– “ஏங்க சார், இது என்ன சிறுவாணி நீரா?” என்று கேட்டார். “ஆமாம்! சிறுவாணி நீரை எங்கள் வீடுகளுக்கே கொண்டுவந்து இலவசமாகக் கொட்டுகிறார்கள். உமக்கு 
வேண்டுமானாலும்-கிருஷ்ணகிரிக்கே இலவசமாகக் கொட்டச் சொல்கிறேன்” என்றேன்.

“என்னசார், கிண்டல் பண்ணறீங்க! உள்ளதைச் சொல்லுங்க சார்!” என்றார். “உள்ளதைத்தான் சொன்னேன். மாரியாத் தாள் (மழைக்கடவுள்) உங்கள் வீட்டு மேல் கிருஷ்ணகிரியில் பிரதி வருஷமும் தூய காய்ச்சி வடித்த (மழை) நீரைக் கொட்டுவ தில்லையா?” என்றேன்.

அப்போதுதான் அவருக்கு விளங்கியது. என் பாட்டிலில் நான் கொண்டு வந்திருந்தது என் வீட்டுக் கான்ங்க்ரீட் கூரையில் இருந்து நான் அறுவடை செய்து சேமித்து வைத் துள்ள மழைநீர் என்பதைப் புரிந்து கொண்டார். அடுத்த வாரமே என் வீட்டுக்கு வந்து நான் சேமிக்கும் முறையைப் பார்த்து அப்படியே தன் வீட்டில் செய்தார். இன்று அவருக்கு குடிநீர், சமையல் நீர்பிரச்சினை, மழையே பெய்யாத ஆண்டிலும் இல்லை.

No comments:

Post a Comment